ஆசிய சாம்பியன்களின் வாகன பேரணி ஆரம்பம்! (நேரலை )
Cricket
Netball
Sri Lanka
Asia Cup 2022
By pavan
2022ஆம் ஆண்டுக்கான் ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியும் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இன்று, காலை 6 மணியளவில் குறித்த இரு குழாமினரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியாக அழைத்து வரப்பட்டனர்.
அத்துடன், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து இலங்கை காவல்துறையினரால் வாகன அணிவகுப்பில் வீரர்கள் அணிவகுத்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.
ரணிலின் அழைப்பு
இந்நிலையில், தாய்நாட்டை ஆசியாவின் உச்சியில் உயர்த்தி சர்வதேசப் புகழ் பெற்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வரவேற்க தேசியக் கொடியுடன் பிரதான வீதிகளுக்கு வருமாறு பொது மக்களிடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி