ஆசியாவின்100 சிறந்த விஞ்ஞானிகள் -இலங்கையரும் இடம்பிடிப்பு
University of Colombo
University of Moratuwa
Sri Lanka
By Sumithiran
ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையை சேர்ந்த ஐந்து விஞ்ஞானிகளும் இடம்பிடித்துள்ளனர்.
ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை, ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளை பட்டியலிட்டுள்ளது.
விஞ்ஞானிகள் விபரம்
இதன்படி கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சதுரங்க ரணசிங்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஷானி சவிந்த ரணதுங்க, கலாநிதி ஆஷா டிவோஸ், கலாநிதி ரொஹான் பெத்தியகொட மற்றும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன ஆகியோரே இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகளாவர்.
2016 முதல் ஒவ்வொரு ஆண்டும், ஆசிய விஞ்ஞானி இதழ் ஆசியாவின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்களின் பட்டியலைத் தொகுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்