ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்!
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் நதீஷா ராமநாயக்க முதலாம் இடத்தை தட்டி சென்றுள்ளார்.
அத்துடன் பிரான்ஸில் நடைபெறும் பரா மெய்வல்லுநர் உலக சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் சமித்த துலான் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
நேற்றைய தினம்(13) தாய்லாந்தின் பேங்கொக்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாளாகும். மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தை 52.61 விநாடிகளில் கடந்து இலங்கையின் நதீஷா ராமநாயக்க தங்கப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
இந்த போட்டியில் நதீஷா ராமநாயக்க வெளிப்படுத்திய அதி சிறந்த ஆற்றல் இதுவாகும்.
ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலம்

வெள்ளிப்பதக்கத்தை உஸ்பெகிஸ்தானும் வெண்கலப்பதக்கத்தை இந்தியாவும் வென்றன.
இதேவேளை, பிரான்ஸின் பாரிஸில் நடைபெறும் பரா மெய்வல்லுநர் உலக சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான எவ்.64 (F64) ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சமித்த துலான் பங்கு பற்றி 64.06 மீட்டருக்கு திறமையை வெளிப்படுத்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.