அசாம் தேர்தல் முடிவுகள் : பெரும்பான்மையை கடந்து பாஜக முன்னிலை
India
Assam
Election
By Sathangani
அசாம் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி மொத்தம் 126 இடங்களில் நடைபெற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை 64 இடங்களை கடந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 97 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அத்துடன் காங்கிரஸ் 26 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், அடுத்த இடத்திர் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளது.
இதேவேளை அசாமின் ஜலுக்பாரியில் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா முன்னிலை வகிக்கும் நிலையில் அங்கு கடந்த 2021 இல் அமைந்த ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான ஆட்சி தொடர்வது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி