வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய் !

Vijay M K Stalin Tamil nadu Tamil Nadu Election 2026 TVK
By Sathangani May 04, 2026 02:37 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலில்  பெரம்பூரில் வெற்றிப் பெற்றதற்கான சான்றைப் பெற்றார் விஜய் பெற்றுக்கொண்டுள்ளார்.

அவர் படித்த அதே லயோலா கல்லூரியில் சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் பெரும் வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய இணைப்பு

த.வெ.க கட்சியும் அதன் தலைவரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள விஜய் வாக்கு என்னும் நிலையத்துக்கு செல்வதனை இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெற்றி வாகை சூடிய மகனுக்காக வீட்டு வாசலில் காத்திருந்த தந்தை மற்றும் குடும்பத்தாரை சந்தித்து விஜய்  வெற்றியை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

பொதுமக்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் விஜய் தனது மகிழ்ச்சியையும் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

ஒன்பதாம் இணைப்பு

நொடிக்கு நொடி மாறும் நிலவரம் : 108 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் மாலை 05.24 நிலவரப்படி தவெக 14 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 94 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

இந்த நிலையில் திமுக 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 53 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

அத்துடன் அதிமுக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 43 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

எட்டாம் இணைப்பு

நொடிக்கு நொடி மாறும் நிலவரம் : 100 ஆக சரிந்த த.வெ.கவின் வெற்றி தொகுதிகள்

தமிழக அரசியலில் மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி தவெக கட்சியின் வெற்றி தொகுதிகள் 100 ஆக சரிந்துள்ளது.  

முன்னதான 110 இடங்கள் வெற்றி என அறிவிக்கப்பட்ட பின்னணியில் தற்போது இடம்பெற்ற சுற்று வாக்கு கணக்கெடுப்பில் 100 ஆக மாறியுள்ளது.

இதன்படி தற்போது தி.மு.க கட்சியானது 53 தொகுதிகளிலும், அ.தி.மு.க கட்சியானது 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மீண்டும் 109 தொகுதிகளில் தவெக முன்னிலை

வெளியாகிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளின் மாலை 4.30 நிலவரப்படி 109 தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.

அத்துடன் திமுக 58 இடங்களிலும் அதிமுக 44 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்

ஏழாம் இணைப்பு

101 ஆக சரிந்த விஜயின் வெற்றித்தொகுதிகள் : மாற்றமடையும் தமிழக தேர்தல் முடிவுகள் 

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளின் மாலை 03.30 நிலவரப்படி 112 இடங்களில் முன்னிலை வகித்த தவெகவின் வெற்றித்தொகுதிகள் 101 ஆக சரிவடைந்து மீண்டும் 106 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் திமுக 57 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன் அதிமுக 50 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

ஆறாம் இணைப்பு

வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு : 112 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளின் 02.00 நிலவரப்படி தவெக 112 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், திமுக 47  இடங்களிலும், அதிமுக 58 இடங்களிலும், நாதக ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றது.

எடப்பாடி தொகுதியில் 7வது சுற்று முடிவில் எடப்பாடி பழனிசாமி 23,837 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதுடன் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 10வது சுற்று முடிவில் 9,105 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் உள்ளார்.

அதிகாரபூர்வ முடிவுகள் - https://results.eci.gov.in/ResultAcGenMay2026/index.htm

ஐந்தாம் இணைப்பு

வெளியாகி வரும் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளின் 12.00 நிலவரப்படி தவெக 107 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன் அதிமுக கூட்டணி 65 இடங்களிலும் திமுக கூட்டணி 60 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.

இது தற்போதைய சுற்று வாக்கு எண்ணிக்கையில் 13 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளில் இதுவரை 1.5 கோடி வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 50 இலட்சம் வாக்குகளை த.வெ.க பெற்றுள்ளது.

நான்காம் இணைப்பு

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காலை 11.50 நிலவரப்படி தவெக 107 இடங்களில் முன்னிலை வகிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அத்துடன் அதிமுக கூட்டணி 74 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், திமுக கூட்டணி 52  இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

இந்த நிலையில் நாங்குநேரி தொகுதியில் 10வது சுற்றிலும் தவெக முன்னிலை வகிப்பதுடன், மதுரை மேற்கு,  திருவிகநகர்,  கே.வி.குப்பம்,  ராதாபுரம்,  காரைக்குடி,  உத்திரமேரூர், செய்யூர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகிக்கின்றது.

மூன்றாம் இணைப்பு

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வரும் நிலையில் காலை 10.50 மணி நிலவரப்படி தவெக 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

அத்துடன் அதிமுக கூட்டணி 75 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், திமுக கூட்டணி 51 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் : பா.ஜ.க முன்னிலை... மம்தா பானர்ஜி பின்னடைவு

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் : பா.ஜ.க முன்னிலை... மம்தா பானர்ஜி பின்னடைவு

இந்த நிலையில் நாமக்கலில் 3 தொகுதிகளில் தவெக. முன்னிலை வகிப்பதுடன், கரூரில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகிக்கின்றார்.

வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய் ! | Tamil Nadu Assembly Election Results 2026

இதேவேளை வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காலை 10.40 நிலவரப்படி வரை த,வெ,க 33.9 சதவீத வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வரும் நிலையில் காலை 10.30  நிலவரப்படி 234 தொகுதிகளில் 102 இடங்களில் தவெக முன்னிலை வகிப்பதுடன், 81 இடங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை வகிப்பதுடன் 51 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.

இந்தநிலையில் எந்த கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகிப்பதுடன், துறைமுகம், விருத்தாசலம், காங்கேயம், திருப்பூரில் 5 தொகுதிகள், தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகள், திருப்பரங்குன்றம், அம்பத்தூர், மாதவரம், ஆலந்தூர், வில்லிவாக்கம், திண்டுக்கல், திருவெறும்பூர்,  பொள்ளாச்சி, பல்லடம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, வேளச்சேரி, திருப்போரூர், மதுரை மேற்கு, ராதாபுரம், மதுரை மத்திய தொகுதி, ராயபுரம் ஆகிய தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்துள்ளது.

இந்தநிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா முன்னிலை வகிப்பதுடன், மதுரை மத்திய தொகுதியில் த.வெ.க வேட்பாளர் முஸ்தபா முன்னிலை வகிக்கின்றார்.

இதேவேளை தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுகவைச் சேர்ந்த 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வரும் நிலையில் சற்று முன்னர் வரை வெளியான முடிவுகளின் படி திமுகவின் முக்கிய அமைச்சர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உட்பட பலரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் தவெகவின் புதுமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

அந்தவகையில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. முன்னிலையில் உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் பின்னடைந்துள்ளார்.

திமுக அமைச்சர்களான கீதா ஜீவன், நாசர், முத்துசாமி, ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்களும் பின்னடைந்துள்ளனர்.

ஆட்சி அமைக்கப்போவது எப்படி..! தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை

ஆட்சி அமைக்கப்போவது எப்படி..! தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை

பின்னடைவை சந்தித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்களின் தொகுதிகளில் தபால் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய் ! | Tamil Nadu Assembly Election Results 2026

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன் மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து போட்டியிட்ட இயக்குநர் சுந்தர்.சி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றார்.

இதேவேளை எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் உள்ளார்.

you may like this 


உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்...! 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்...! 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

ஈரானின் 14 அம்ச அமைதித் திட்டம்: ட்ரம்ப் வழங்கிய பதில் - உற்று நோக்கும் உலக நாடுகள்

ஈரானின் 14 அம்ச அமைதித் திட்டம்: ட்ரம்ப் வழங்கிய பதில் - உற்று நோக்கும் உலக நாடுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026