அசாமில் பேருந்து விபத்து: 14 பேர் பலி 30 பேர் படுகாயம்(படங்கள்)
அசாம் மாநிலத்தில் அத்கேலியா கோலாகாட் பாலிஜான் நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து , இன்று(3) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நிலக்கரி ஏற்றிச் சென்ற லொரி ஒன்று பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம்
விபத்து தொடர்பில், கோலாகாட் காவல் கண்காணிப்பாளர் ராஜேன் சிங் கூறுகையில், அந்த பேருந்தில், 45 பேர் இருந்ததாகவும், அவர்கள் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அடர்ந்த மூடுபனி காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சரியான காரணத்தைக் கண்டறிய நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்ய மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |