சர்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பிணையில் விடுதலை
சர்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(3) காலை பிணை வழங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிணை வழங்கப்பட்ட போதிலும், பாதிரியார் ஜெரோம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இடைக்கால உத்தரவு
மதங்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த ஜெரோம் பெர்னாண்டோவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 17ஆம் திகதி இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
எனினும், பெர்னாண்டோ நாடு திரும்பிய 48 மணி நேரத்திற்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அவர் இலங்கை வந்தவுடன் அவரைக் கைது செய்ய வேண்டாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டது.
பிணையில் விடுவிப்பு
இந்நிலையில் வெளிநாடு சென்றிருந்த ஜெரோம் பெர்னாண்டோ நவம்பர் 29 கடந்த நாடு திரும்பினார்.
இதனை தொடர்ந்து நவம்பர் 30 திகதியன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 8 மணி நேரம் இவரை விசாரணைக்குட்படுத்தினர்.
மேலும், கடந்த டிசம்பர் 01 திகதி ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |