தாக்கப்பட்ட ஊடகவியலாளர் நேரில் சென்று பார்வையிட்ட வியாழேந்திரன்!

Srilanka journalist Attacked Viyalendiran
By MKkamshan Feb 27, 2022 07:47 AM GMT
Report

பேருந்து நிலையம் அகற்றுவது தொடர்பாக வந்தாறுமூலை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கிழக்கு பல்கழலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் லட்சுமனன் தேவபிரதீபன் என்ற ஊடகவியலாளர்   நேற்று காலை செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஊடகவியலாளர் செங்கலடி வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வரும் நிலையில், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ( Viyalendiran) நேற்று இரவே நேரில் சென்று பார்வையிட்டார்.

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணையினை முன்னெடுக்குமாறு ஏறாவூர் காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குறித்த ஊடகவியலாளரை வைத்தியசாலையில் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

"ஊடகவியலாளர்களை என்றும் மதிப்பவன் நான். கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் நடாத்திய எத்தனையோ போராட்டங்களில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவன் நான்.

அத்தோடு கடந்த ஆட்சியில் கல்குடா பகுதியில் நிறுவப்பட்ட எத்தனோல் தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான சசிகரன் மற்றும் நித்தியானந்தன் ஆகியோர் தாக்கப்பட்ட போது வீதி வீதியாக இறங்கி அவர்களுக்காக குரல் கொடுத்தது நானும் நான் சார்ந்த பிள்ளைகளுமே என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

குறித்த சம்பவம் தனிப்பட்ட ஒரு குடும்பத்தாரிற்கும் குறித்த கிராமத்தை சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்றுள்ளதே தவிர, தாக்குதலை நடாத்தியதாக ஊடகவியலாளர் குறிப்பிடும் குறித்த கிராம அபிவிருத்தி சங்க உப தலைவர் எமது அலுவலக உத்தியோகத்தரும் கிடையாது. எமது கட்சியின் உறுப்பினரும் கிடையாது.

அத்துடன் எனது உத்தியோகத்தர்கள் யாரும் அவரை குறித்த இடத்திற்கு அழைத்து வரவும் இல்லை. ஊடகவியலாளர் தாக்கப்பட்ட அந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த விடையத்தை பிழையான முறையில் திரிபுபடுத்தி, இதனை வைத்து யாரும் அரசியல் இலாபம் தேட முயற்சிக்க வேண்டாம்" என மேலும் தெரிவித்துள்ளார்.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025