சர்வ வல்லமையும் எமக்கு உள்ளது! நாட்டு மக்களுக்கு ஜே.வி.பி வழங்கியுள்ள உறுதி (படங்கள்)
நாட்டில் என்றுமில்லாதவாறு சிறப்பானதொரு ஆட்சியை எம்மால் வழங்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்கக்கூடிய சர்வ வல்லமையும் தேசிய மக்கள் சக்தியில் இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்றைய தினம் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தனது உரையில்,
ரவி கருணாநாயக்க, பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இல்லாது எப்படி நாட்டை ஆள்வது என சிலர் கேட்கின்றனர். எம்மால் முடியும். திறமையானவர்கள் எம்முடன் இருக்கின்றனர்.
என்றுமில்லாதவாறு சிறப்பானதொரு ஆட்சியை வழங்ககக் கூடியதாக இருக்கும். எமது ஆட்சி ஊழல் அற்ற ஆட்சியாகவே அமையும். ஊழல் செய்தவர்களை தண்டிக்ககூடிய தகைமை ஊழல் அற்றவர்களுக்கே இருக்கின்றது. நாம் எந்தவொரு மோசடியிலும் ஈடுபட்டது கிடையாது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் தேவையில்லை. முன்னாள் அரச தலைவர்களுக்கு சலுகைகளும் தேவையில்லை. எனவே, மாற்றம் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். அதற்கான சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






















