ராஜபக்சர்களுக்கு குறிசொல்பவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எனது கோயிலுக்கு வந்தது அரசியல் முடிவுகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்காக அல்ல. சுகவீனம் காரணமாக நேர்த்தி கடனுக்காகவே வந்தார்.
அரசியல்வாதிகளுக்கு கோயிலில் சேவைகளை வழங்கியமை குறித்து தான் தற்போது வருத்தப்படுவதாக அனுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் வசிக்கும் ஞானா அக்கா என அழைக்கப்படும் ஞானவதி ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஞானக்கா இதனைத் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி விட்டேன்
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி விட்டேன்.
செல்வதற்கு இடமில்லாது இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பாதுகாப்புக் கோரினால், வீட்டுக்கு அழைக்க மாட்டேன்.
கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்திற்கும் எனது கோயிலுக்கும் இடையிலான தொடர்பு 13 வருடத்திற்கு மேற்பட்டது.
அரச தலைவராக தெரிவான பின் அவர் கோயிலுக்கு வரவில்லை
அரச தலைவராக தெரிவாகும் முன்னர் அவர் அடிக்கடி கோயிலுக்கு வந்து சென்ற போதிலும், அரச தலைவராக தெரிவான பின்னர் அவர் என்னை சந்திக்க கோயிலுக்கு வரவில்லை.
இப்படியான பின்னணியில் கோட்டாபய ராஜபக்சவுடன் தற்போது எவ்வித தொடர்புகளும் இல்லை.
ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக சமூகத்தில் என்னை பற்றி தவறான விம்பம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
