கோட்டாபய எங்கிருக்கிறார்..! வெளிநாட்டில் இருந்து கிடைத்த தகவல்
இராணுவத் தலைமையகத்தில் கோட்டாபய
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டதாக இந்திய செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
அரச தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச, இராணுவத் தலைமையகத்தில் தஞ்சமடைந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தை கோடிட்டு இந்திய செய்திச்சேவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தொடரும் பதவி விலகல்கள்
நாட்டில் மக்கள் புரட்சி வெடித்த நிலையில், தாம் எதிர்வரும் 13ஆம் திகதியன்று பதவி விலகுவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கையில் நெருக்கடி நிலை மோசமடைந்ததையடுத்து, தாம் பதவி விலகத்தயாராக இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து பலரும் தற்போது தமது பதவி விலகலை அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.