'2022 சுபகிருது' புத்தாண்டு உங்களுக்கு எப்படி அமையப் போகின்றது? நிகழப் போகும் விபரீத மாற்றங்கள்!
தமிழ் - சிங்கள புத்தாண்டான சுபகிருது வருடம் 2022 சித்திரை 1ஆம் திகதியான நாளை ஆரம்பமாகிறது.
சுபகிருது ஆண்டு தொடக்க கிரக நிலையானது மேஷத்தில் சூரியன், ராகு, புதன், கன்னியில் சந்திரன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சனி, கும்பத்தில் செவ்வாய், சுக்கிரன், மீனத்தில் குரு என அமைந்திருக்க தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
புத்தாண்டு பிறந்தாலே புதிய ஆண்டு எம்முடைய ராசிக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று ஆர்வமாக இருப்போம்.
அந்த வகையில் உங்கள் ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்கள் இதோ,
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் சாதுர்யமும் இருந்தால் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒன்றாக இணைந்து செயற்படுவீர்கள். உங்களுடைய கருத்துக்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரித்துக் காணப்படும். பொருளாதார ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கும் வாய்ப்புள்ளது. உடல் நலனில் அவ்வப்போது பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கும். தேவையில்லாத மருத்துவ செலவுகளை தவிர்க்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வருடம் குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு கண்டிப்பாக சுப பலன்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த வருடம் உங்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழப் போகிறது. குடும்பத்தை பொறுத்தவரை மகிழ்ச்சியான சூழல் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அவ்வப்போது ஒன்றாக சேர்ந்து குல தெய்வ கோவிலுக்கு சென்று வருதல் வேண்டும். பொருளாதார ரீதியாக பணம் பல வழிகளிலிருந்து உங்களுக்கு வந்தடையும். ஒன்பதாம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் பொழுது ஆடை, ஆபரணங்கள், வீடு, வாகனம் போன்ற யோகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த அனைத்துக் குறைகளும் படிப்படியாக குறைந்து காணப்படும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இதுவரை பல பிரச்சினைகளை சந்தித்து வந்த உங்களுக்கு இனி வரக் கூடிய ஆண்டு சிறப்பாக அமைய போகிறது. என்னடா இது வாழ்க்கை என்று நினைத்தவர்களுக்கு வாழ்வில் திடீர் மாற்றங்கள் நடக்கப்போகிறது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக பல புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஒக்டோபர், நவம்பர் மாதத்தில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். வெளியில் கொடுத்த அனைத்துக் கடன் மீதிகளும் மொத்தமாக வசூலாகும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில உபாதைகளை சந்திக்கலாம். கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி நல்ல புரிதல் உணர்வு காணப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமண வாய்ப்புகள் நிகழும்.
கடகம்
அதிக கஷ்டங்களை அனுபவித்து வந்த நிலையில் இந்த ஆண்டு மனதில் ஆறுதல் கிடைக்கும் ஆண்டாக மாறப்போகிறது. குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும். திடீர் நன்மைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் செலவிற்கு ஏற்ப வரவு வந்து சேரும். பணத்தை கையாளும் போது கவனமாக இருக்கவும். உங்களுடைய கடின உழைப்பால் இந்த ஆண்டு கடக ராசியினருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஆண்டின் ஆரம்ப காலத்தில் குருவின் தாக்கம் இருந்தாலும் நாளடைவில் அவை குறையத் தொடங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் மனதிற்கு பிடித்தவர்களை மணமுடிக்கும் யோகம் கிடைக்கும்.
சிம்மம்
இந்த ஆண்டு சிம்ம ராசியினருக்கு மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும் ஆண்டாக அமைய போகிறது. எப்போதும் ஏதாவது ஒரு தடைகளையும், கஷ்டங்களையும் சந்தித்துக் கொண்டிருந்த உங்களுடைய வாழ்க்கையில் அவை படிப்படியாக குறைந்து ஏற்றமான ஒரு நல்ல சூழ்நிலை அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள், சண்டை சச்சரவுகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். பொருளாதாரத்தை பொறுத்தவரை இனிமையான பலன்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். புதிதாக எடுக்கும் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சினைகள் அனைத்தும் குறைந்து காணப்படும். ரத்த காயங்கள், வெட்டுக் காயங்கள் போன்றவை அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் வெளியிட பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரித்து காணப்படும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு குடும்ப சூழலைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கமான பலன்கள் காணப்படும். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதற்கான தீர்வுகளும் கிடைத்துவிடும். எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிட்டு செயற்படுவது நல்லது. பொருளாதாரத்தை பொறுத்தவரை நல்ல வளர்ச்சி காணப்படும். இதற்கு தாய் தந்தையரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்தடையும். ஆரோக்கியத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் தங்களை சுத்தி சுகாதாரம் பேணிக் காப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வினைக் கொடுக்கும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
துலாம்
குடும்பத்தை பொறுத்தவரை அனைத்துப் பிரச்சினைகளும் படிப்படியாக குறையத் தொடங்கும். வீட்டில் சுப காரியம் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதாரத்தில் வீண் செலவுகளை குறைத்துக்கொண்டு திட்டமிட்டு செயற்பட வேண்டும். அவ்வப்போது திடீர் அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வாகனத்தில் வெளியில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சற்றுக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை வரம் கேட்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் புரிதல் உணர்வு அதிகரித்து காணப்படும்.
விருச்சிகம்
எந்த ஒரு விஷயத்தையும் அவசரப்படாமல் பொறுமையாக செய்யும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நல்ல பலன்கள் கைகூடி வரும். கடன் தொல்லை, முதலீடு இழப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். குருவின் அருளால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வாழ்க்கைத் துணை இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். விலை அதிகம் உள்ள பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணத்தை திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சுமாராகத்தான் பலன்கள் காணப்படும். அடிக்கடி உடல் நிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிதாக எந்தப் பாதிப்புகளும் உண்டாகாது. புதிதாக திருமணமானவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது.
தனுசு
ஒரு பிரச்சினை போனால் இன்னொரு பிரச்சினை வந்துகொண்டு இருந்த நிலையில், அதற்கு மாறாக இந்த ஆண்டு அமைய போகிறது. குடும்பத்தில் திடீர் நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் தீரும். இதுவரை உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்வார்கள். பொருளாதாரத்தில் இதுவரை மந்த நிலையில் இருந்த வருமானம் உங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. செலவுகளை திட்டமிட்டுச் செய்ய வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற வருமானம் ஈட்டக்கூடிய இடங்களில் இருப்பவர்கள் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். வாடகை இடத்திலிருந்து, சொந்த இடத்திற்கு தொழிலில் மாற்றம் உண்டாக வாய்ப்புகள் அமையும். மற்றவர்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி பாராட்டுகளை பெறுவீர்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வெளியில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மன உளைச்சல், மன இறுக்கம் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதால் இவ்வாண்டில் தியானம், யோகா போன்ற மன அமைதி தரும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பு நிறைந்த ஆண்டாக மாறப்போகிறது. எதிலும் இதுவரை நாட்டம் இல்லாமல் இருந்த நீங்கள், இனி அனைத்தையும் கற்றுக் கொள்ளும் உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். மகிழ்ச்சியான சூழல் குடும்பத்தில் நிலைக்கும். சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உங்களுடைய முயற்சிகளுக்கு ஊக்குவிப்பார்கள். பொருளாதாரத்தில் உங்களுடைய புதிய முயற்சியில் நல்ல லாபம் கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஆகும். வெளியில் பயணம் செய்யும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையத் தொடங்கும். திருமணமான புதிய தம்பதிகளுக்கு இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய சுக்கிரன் அருள் கிடைக்கும்.
கும்பம்
திறமைக்கு ஏற்ப சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த உங்களுக்கு, இவ்வாண்டு அதற்குரிய அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய வகையில் இந்த ஆண்டு அமைய இருக்கிறது. குடும்பத்தில் பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு எதிர்பாராத திடீர் நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்க இருக்கிறது. கடந்த கால சேமிப்புகள், முதலீடுகள் போன்றவற்றால் இவ்வாண்டு அற்புத பலன்களைப் பெற இருக்கிறீர்கள். சுப காரியச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நவீன பொருள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவற்றில் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகமாக கிடைக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை அதிகமாக கவனத்துடன் இருக்க வேண்டும். சுவாச பிரச்சினைகள் இருப்பின் மூச்சுப் பயிற்சி செய்வது நல்லது. கணவன் மனைவி இருவரும் புரிதல் உணர்வினை ஏற்படுத்திக்கொள்வீர்கள். திருமணமான புதுமண தம்பதிகளுக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க இருக்கிறது.
மீனம்
இந்த ஆண்டானது மீன ராசியினருக்கு தங்களுடைய தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை வாரி வழங்குகிறது என்று கூறலாம். ஏற்ற இறக்கமான பலன்கள் குடும்பத்தில் காணப்படும். ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். வாழ்க்கையில் எந்த பிரச்சினை வந்தாலும் மனம் தளராமல் இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். இவ்வருடம் முழுவதும் உங்களுக்கு தேவையான விஷயங்கள் கடினமான போராட்டத்திற்கு பிறகே கிடைக்கும். எதிலும் பொறுமையை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உணவு கட்டுப்பாட்டில் அக்கறை தேவை. மன உளைச்சலில் இருப்பவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். பல வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
