செவ்வாய் - புதன் பெயர்ச்சி 2023..! யாருக்கு விடிவு காலம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, பல பெரிய கிரகங்கள் ஜனவரி மாதம் பெயர்ச்சியாகப் போகின்றன.
அதன்படி ஜனவரி 13 ஆம் திகதி, செவ்வாய் ரிசப ராசியில் இடப் பெயர்ச்சியாகப்போகிறார். அதேசமயம், கிரகங்களின் அதிபதியான புதன் தனுசு ராசியில் உதயமாகுவார்.
கிரகங்களின் இந்த பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப வடிவில் காணப்படும்.
ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் சிறப்பான பலன்கள் தரும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
இரண்டு கிரகங்களின் ராசி மாற்றம்
ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 13, 2023 அன்று, மதியம் 12:07 மணிக்கு, செவ்வாய் ரிசப ராசியில் இடப் பெயர்ச்சியாகுவார்.
மறுபுறம், காலை 5.15 மணிக்கு தனுசு ராசியில் புதன் உதயமாகுவார்.
இந்த இரண்டு கிரகங்களின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.
மேச ராசி
மேச ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். இதன் போது தகராறில் சிக்கியவர்கள் நிவாரணம் பெறலாம்.
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இத்துடன் இந்த ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
கடக ராசி
ஜோதிட சாஸ்திரப்படி கடக ராசிக்காரர்களுக்கு இரண்டு கிரகங்களின் இட மாற்றம் சாதகமாக அமையும்.
இதன் போது இந்த ராசிக்காரர்கள் பண நெருக்கடியில் இருந்து விடுபடுவார்கள். பணியிடத்தில் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.
சிம்ம ராசி
இந்த ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சியால் சுப பலன்களைப் பெறுவார்கள். பொருளாதார நிலை மேம்படும்.
பங்குச்சந்தை போன்றவற்றுடன் தொடர்புடையவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயுடன் உங்கள் உறவு மேம்படும்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா
