அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் உள்ள அஸ்வெசும பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன இந்த முன்னோடித் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகத் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி
அத்துடன் உலக வங்கித் திட்டத்தின் கீழ், 10 ஆயிரத்து 975 பயனாளி குடும்பங்கள் வலுவூட்டல் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சுமார் 40 சதவீதமானோர் இதுவரை இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக, தம்மிக முத்துகல சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியும் 13 மாவட்டங்களிலுள்ள 10 ஆயிரத்து 300 குடும்பங்களை வலுவூட்டுவதற்கான முன்னோடித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
2.5 மில்லியன் டொலர் மோசடி- அதிகாரியின் உயிரிழப்புக்கு அரசின் தவறான முடிவுகளே காரணம்: விமல் வீரவன்ச சாடல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |