2.5 மில்லியன் டொலர் மோசடி- அதிகாரியின் உயிரிழப்புக்கு அரசின் தவறான முடிவுகளே காரணம்: விமல் வீரவன்ச சாடல்

Sri Lanka Politician Wimal Weerawansa Sri Lanka
By Shalini Balachandran May 03, 2026 01:21 AM GMT
Report

நீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதற்கு முன்னரே அமைச்சர்கள் தீர்ப்புகளைக் கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் இதற்காக ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் அனைவரும் நீதிபதிகள் முன்னிலையில் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் பணி நீக்கப்பட்ட மேலதிக பணிப்பாளர் உயிரிழந்துள்ளமை உயிர்மாய்ப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது.

யாழில் வாள்வெட்டில் முடிந்த வாய்த்தர்க்கம்...! பெண்ணொருவரின் 2 விரல்களைத் துண்டித்த இளைஞர்

யாழில் வாள்வெட்டில் முடிந்த வாய்த்தர்க்கம்...! பெண்ணொருவரின் 2 விரல்களைத் துண்டித்த இளைஞர்

தவறான தீர்மானங்கள்

அரசின் தவறான தீர்மானங்களினால் அரச உத்தியோகத்தர்களே பலியாகின்றார்கள் இருப்பினும் தீர்மானம் எடுத்த அமைச்சரவை உறுப்பினர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பற்றி ஆளும் தரப்போ அல்லது ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட எதிர்க்கட்சியினரோ பேசுவதில்லை.

2.5 மில்லியன் டொலர் மோசடி- அதிகாரியின் உயிரிழப்புக்கு அரசின் தவறான முடிவுகளே காரணம்: விமல் வீரவன்ச சாடல் | Wimal Demands Apology From President Ministers

கடந்த ஆண்டு செப்டெம்பர் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு கடன்களைச் செலுத்தும் அதிகாரம் இலங்கை மத்திய வங்கியின் வசமே காணப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் மத்திய வங்கி ஆளுநரின் அனுமதியுடன்தான் ஆஸ்திரேலிய நிறுவனத்துக்குக் கட்டம் கட்டமாக ஏழு கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன.

யாழில் கிணற்றில் தவறி விழுந்த யுவதிக்கு நேர்ந்த கதி!

யாழில் கிணற்றில் தவறி விழுந்த யுவதிக்கு நேர்ந்த கதி!

அரசியல் எதிராளி

2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவையும் விசாரிக்க வேண்டும்.

அவருக்கு மாத்திரம் ஏன் சிறப்புச் சலுகை வழங்கப்படுகின்றது ? எனவே இந்த 2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநரையும் விசாரிக்க வேண்டும்.

2.5 மில்லியன் டொலர் மோசடி- அதிகாரியின் உயிரிழப்புக்கு அரசின் தவறான முடிவுகளே காரணம்: விமல் வீரவன்ச சாடல் | Wimal Demands Apology From President Ministers

மே தினக் கூட்டத்தில் அரசியல் எதிராளிகளை இந்த ஆண்டு சிறைக்கு அனுப்புவதாக ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் குறிப்பிட்டதன் மூலம் அரசின் வன்மம் வெளிப்பட்டுள்ளது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தன்னைச் சிறைக்கு அனுப்புவதாகக் கூறுகின்றார், நீதிமன்ற விசாரணைக்கு முன்னரே இவ்வாறு தீர்ப்புக் கூறுவதற்கு அவர் ஒன்றும் நீதிபதி அல்ல.

நீதிமன்றங்களை அவமதிக்கும் வகையில் செயற்படும் அரச தரப்பினர், நீதித்துறைக்கு முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் நாடாளுமன்றத்தில் அதிரடி மசோதா: நிரந்தரமாக மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை

ஈரான் நாடாளுமன்றத்தில் அதிரடி மசோதா: நிரந்தரமாக மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்