அஸ்வெசும் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
மலையகத்தில் அஸ்வெசும வேலை திட்டம் 45 சதவீதமே நிறைவடைந்துள்ளதாகவும், இத்திட்டம் முழுமையடைய மக்களின் ஒத்துழைப்பும் அவசியமென அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும உதவி பெறத்தகுதியிருந்தும், பெயர்ப்பட்டியலில் உள்வாங்கப்படாதுள்ளவர்கள் மற்றும் இதுவரை 45 சதவீதம் மட்டுமே பூர்த்தி உள்வாங்கபட்டும் இன்றளவும் பணம் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளவர்கள் பிரதேச செயலகத்துக்குச் சென்று மீண்டும் விண்ணப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விண்ணப்பம்
அத்தோடு, பெருந்தோட்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல மலையகத்திலுள்ள அஸ்வெசும பெறுவதற்கு தகுதியானவர்கள், எவராக இருப்பினும் இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, உள்வாங்கப்பட்டும் இன்றளவும் பணம் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளவர்கள் பிரதேச செயலகத்துக்குச் சென்று மீண்டும் விண்ணப்பிக்க முடியும் என்றும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |