மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அஸ்வெசும கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விரைவில் பணம்

Sri Lanka Sri Lankan Peoples Money
By Dilakshan Oct 25, 2023 03:14 AM GMT
Report

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தெரிவு செய்யப்பட்டு கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி அந்த நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் தலைமையில் அதிபர் அலுவலகத்தில், அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை உள்ளிட்ட உரிய தரப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது, உரிய வகையில் வங்கிக் கணக்குகளை திறக்காததன் காரணமாக ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 261 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள்: முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள்: முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை


நிதி பகிர்ந்தளிப்பு

மேலும், குறித்த விடயம் தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்தி செய்து பயனாளிகளுக்கு விரைவில் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அஸ்வெசும கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விரைவில் பணம் | Aswesuma Allowance From Tomorrow

அஸ்வெசும பயனாளிகளுக்காக கடந்த ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவு கடந்த 16ஆம் திகதிவரை 5 கட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 12 இலட்சத்து 30 ஆயிரத்து 97 குடும்பங்களுக்கு 770 கோடியே 53 இலட்சத்து 2 ஆயிரத்து 250 ரூபா தொகையிலான நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவை பெறாதவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் பகிர்ந்தளிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவுகள்

அதேவளை, மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளதன் காரணமாக பயனாளிகளுக்கு உரிய கொடுப்பனவுகளை வழங்கும் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக இதன்போது தெரியவந்துள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அஸ்வெசும கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விரைவில் பணம் | Aswesuma Allowance From Tomorrow

அத்துடன், 2 இலட்சம் பயனாளிகள் இதுவரையில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்காததன் காரணமாகவே அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் கருத்து மேலும் தெரிவித்த நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன,வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் சிக்கல் ஏற்படாது சுட்டிக்காட்டினார்.

பிரதேச சபையினால் அஸ்வெசும கணினிக் கட்டமைப்பிலிருந்து வழங்கப்படும் கடிதத்தின் மூலம் தமது பிரதேசங்களிலுள்ள மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளைகளில் அஸ்வெசும பயனாளிகள் தங்களுக்கான கணக்குளை ஆரம்பிக்க முடியும் என்றும் அதன் பின்னர் வங்கியினால் அந்த தகவல்கள் நலன்புரி நன்மைகள் சபைக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டை இல்லாததன் காரணமாக வங்கிக் கணக்குகளை திறக்காதிருப்பவர்களுக்கு 6 மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் குறித்த வங்கிகளில் கணக்குகளை திறப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் பரபரப்பு : இளம்குடும்பபெண் கொலை செய்து புதைப்பு (படங்கள்)

முல்லைத்தீவில் பரபரப்பு : இளம்குடும்பபெண் கொலை செய்து புதைப்பு (படங்கள்)


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025