அஸ்வெசும கொடுப்பனவு பெறக் காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் குறித்து நலன்புரி நன்மைகள் சபை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பயனாளிகளின் பட்டியல் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள், அந்தந்த பிரதேச செயலகங்களுக்குச் சென்று வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான உரிய கடிதத்தைப் பெறவேண்டும்.
புதிய வங்கிக் கணக்கு
அதனைதொடர்ந்து, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி அல்லது பிராந்திய மேம்பாட்டு வங்கியில் இருந்து தங்களுக்கு வசதியான வங்கிக் கிளையில் அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான சம்பந்தப்பட்ட கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்படி, வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் இந்த வங்கிக் கணக்குகளை விரைவில் திறந்து, தொடர்புடைய வங்கிக் கணக்கு விவரங்களை பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தொடர்புடைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …! 54 நிமிடங்கள் முன்
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
2 மணி நேரம் முன்