நாளொன்றுக்கு ஒரு யானையாவது இறக்கிறது - ஊடக சந்திப்பில் சமூக ஆர்வலரால் அவிழ்க்கப்பட்ட உண்மைகள்
நாளொன்றுக்கு குறைந்தது ஒரு யானை உயிரிழக்கும் நிலை நாட்டில் உருவாகியுள்ளதாக சுற்றாடல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்நிலை குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "கடந்த அரசாங்கத்தின் போது அகழிகள் தோண்டுதல் என்ற பெயரில் டெண்டர் கையெழுத்திடப்பட்டு அகழி உருவாக்கும் போர்வையில் குழிகள் தோண்டப்பட்டு மண்ணும், பழங்கால பொருட்களும் கொள்ளையிடப்பட்டன, இந்த கொள்ளையடிப்பின் விளைவுகள் ஒரு புறமிருக்க இன்று வன ஜீவராசிகளுக்கும் இந்த குழிகள் அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.
ஊடக சந்திப்பு

வன நிலங்களின் எல்லைகளில் தோண்டப்பட்டுள்ள இந்த அகழிகள் குறைந்தது சுமார் 10 அடி ஆழமும் 5 அடி அகலமும் கோண்டனவாக உள்ளது என்பதை கூறிய அவர், யானை உற்பட ஏராளமான வனவிலங்குகள் இந்த குழிகளுக்குள் விழுந்து வலியால் அவதிப்படுகின்றன நாளொன்றுக்கு குறைந்தது ஒரு யானையாவது அகழிகள் என்ற போர்வையில் வெட்டப்பட்ட குழிகளில் விழுந்து மீள வழியில்லாமல் உயிர் துறக்கின்றன என்றார்.
அழிக்கப்படும் யானைகள்

இது தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர், "முத்துராஜாவை காட்டிலும் சிறந்த அதிகளவிலான அழகிய யானைகள் நிறைந்த நாடாக விளங்க வேண்டிய நம் நாட்டில் இத்தகைய அழிப்புகளால் இயற்கை வளங்கள் மாத்திரமன்றி வன ஜீவராசிகளும் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றமை வேதனையளிக்கிறது என்றார்"
அது மாத்திரமன்றி, இந்த அகழிகளில் பெரும்பாலானவை கோட்டாபய ராஜபக்ச காலத்தில் தோண்டப்பட்டவை எனவும், எமது சங்கம் அந்த செயற்பாடுகளுக்கு எதிரானது எனவும், அவற்றின் பாதகங்களை சுட்டிக்காட்டிய வேளையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மேற்கண்ட விடயங்களை கூறினார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்