இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த ஆதீனங்கள்
வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்று வருகின்ற சிவராத்திரி நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த சிவராத்திரி நிகழ்வானது நேற்றைய தினம் 05 இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு திருநெல்வேலி பெருங்குளம் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் மற்றும் 103 ஆவது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டுள்ளனர்.
திருக்கோணேஸ்வரம்
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் திருக்கோணேஸ்வரம் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.
உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையானதாக இருப்பதோடு இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.
ஆதினங்கள்
மேலும், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது பதிகங்கள் பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இக்கோயிலில் இடம்பெற்ற நிகழ்வில் ஆதினங்கள் ஆன்மீக சொற்பொழிவை வழங்கியதுடன் பெருந்திரளான பக்தர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |