யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka Army Sri Lankan Tamils Sri Lankan Peoples
By Independent Writer Feb 27, 2026 02:38 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள, சுமார் இரண்டு நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு உள்ளூர் தமிழ் சைவர்கள் மீண்டும் ஒருமுறை பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள, யாழ்ப்பாணம் - வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இலங்கை இராணுவம், தமிழர்களின் தனியார் காணியை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கிலேயே மாற்றுப் பாதையை விரிவுபடுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். 

தனியார் காணி ஊடாக ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்ல இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியை அகலப்படுத்தும் முயற்சி, உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பினை அடுத்து இராணுவத்தால் கைவிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

உயர் பாதுகாப்பு வலயம்

இராஜேஸ்வரி அம்மன் கோயிலும் அதன் சுற்றுப்புறப் பகுதியும் ஜூன் 15, 1990 அன்று உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. மே 2002 முதல், விசேட அனுமதியின் பின்னர், ஒரு சிலருக்கு மாத்திரம் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Temple In Jaffna Under Army Control For 36 Years

போர் தீவிரமடைந்ததால், ஜூன் 2006 இல் அந்த அனுமதியும் நிறுத்தப்பட்டதோடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன், ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக அப்பகுதி மக்களுடன் கோயிலுக்குச் சென்றார்.

பெப்ரவரி 3, 2015, மகா சிவராத்திரி முதல், இராணுவ அனுமதி பெற்றவர்கள் மாத்திரமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக, ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகக் குழு கூறுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், ஜூன் 24, 2023 அன்று வடக்கில் 234 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை ஒட்டி, சைவர்கள் மீண்டும் ஆலயத்தில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். எனினும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை என்ற நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

நிரந்தர பாதையாக மாற்றும் நோக்கம்

கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட, விவசாய நிலங்கள் உட்பட தமிழ் மக்களின் தனியார் காணிகளில் ஆலயத்திற்குச் செல்வதற்கான தற்காலிக பாதை அமைக்கப்பட்டதாக பிரதேசத்தின் குடிமக்கள், சமூக அமைப்புப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Temple In Jaffna Under Army Control For 36 Years

கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையையும் அதைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நிலத்தையும் இராணுவம் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், தமிழ் மக்களின் தனியார் நிலங்கள் வழியாக கோயிலுக்குச் செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்றும் நோக்கத்துடன் இராணுவத்தினர் பெப்ரவரி 16 ஆம் திகதி பணியை ஆரம்பித்தனர்.

இந்தநிலையில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பையடுத்து கைவிட்டதாக, வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவிக்கின்றார்.

இராணுவத்தின் முயற்சிகள் குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதேச சபைத் தலைவர், கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதைக்கு அருகில் தற்போது இராணுவ முகாம் இல்லாவிட்டாலும், இராணுவ வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இன்னும் அந்த இடத்தில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

உழவு இயந்திரம் மீது அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூடு

உழவு இயந்திரம் மீது அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூடு

தடைகளை நீக்குமாறு கோரிக்கை

வாகன பழுதுபார்க்கும் நிலையத்தை உடனடியாக அகற்றவும், இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பழைய வீதியை பக்தர்களுக்காகத் திறக்கவும், கோயிலுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குமாறும் பிரதேசத்தின் தமிழ் சைவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மக்களின் விவசாய நிலங்கள் வழியாக இராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக வீதிக்கு பதிலாக, கோயிலுக்கு செல்லும் பழைய வீதியை விடுவிக்க வேண்டுமென வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ரொசாந்த்குமார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Temple In Jaffna Under Army Control For 36 Years

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணியில் பாதி இராணுவத்தின் கீழ் உள்ளது. அவர்கள் இந்த விவசாய காணிகள் வழியாக ஒரு வீதியை அமைத்து, மக்கள் அதை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கின்றனர், இது கோவிலுக்கு செல்லும் பழைய வீதி விடுவிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகும்.

அதாவது அவர்கள் வீதியை மாற்றுகிறார்கள். அவர்கள் இந்த தற்காலிக வீதியை அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் மக்கள் பழைய வீதியை கோருகின்றனர். பழைய வீதியை நிச்சயமாக விடுவிக்க வேண்டும்.

இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியால் சில தனியார் காணிகள் பிரிக்கப்பட்டுள்ளதாக பொது பிரதிநிதிகள் கூறுகின்றனர். மேலும், தற்காலிக வீதியை நிரந்தரமாக மாறினால், மக்கள் தமது காணி மீதான உரிமையை இழக்க நேரிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.” என தெரிவித்தார்.

நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025