ஐரோப்பிய வெப்பத்தை தணிக்கும் அத்திலாந்திக் காற்று - காட்டுத் தீ தாக்கம் தீவிரம்
London
France
Climate Change
Europe
By Vanan
வெப்பத்தை தணிக்கும் அத்திலாந்திக் காற்று
ஐரோப்பாவில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய கடும்வெப்பம் அத்திலாந்திக் சமுத்திரத்தில் இருந்து வந்த குளிர்ந்த காற்றினால் தணிக்கப்பட்டதால் கடுமையான வெப்ப அலை முடிவுக்கு வந்துள்ளது.
எனினும் ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீயின் தாக்கம் தொடர்ந்தும் தீவிரமாகவே உள்ளது.
பிரான்சில் காட்டுத்தீ கடுமையாக பரவிய பிராந்தியங்களுக்கு அரசதலைவர் இமானுவல் மக்ரன் இன்று நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
லண்டனில் நேற்றிரவு தீப்பரவல்
இதேவேளை, இங்கிலாந்தில் தீவிர வெப்ப அலையை தொடர்ந்து லண்டன் உள்ளிட்ட பல இடங்களில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டது.
இங்கிலாந்தில் தீவிர வெப்ப அலை - பல கட்டடங்களில் தீப்பரவல்! லண்டன் மக்களுக்கு அவசர அறிவித்தல் |
பல குடியிருப்புகள், கட்டடங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், பெருநகர (மெட் ) காவல்துறை இதனை கட்டுக்குள் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்