கதிகலங்கிய ரஷ்யா - கச்சேரியினுள் புகுந்த ஆயுததாரிகள்: 40 பேர் பலி
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றினால் 40 பேர் வரை உயரிழந்துள்ளதுடன் 100 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொஸ்கோவில் "பிக்னிக்" என்ற ராக் இசைக்குழுவின் கச்சேரியில் கலந்துகொண்ட மக்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெடிமருந்து
இந்நிலையில், இசை நிகழ்ச்சியினுள் ஆயுதம் ஏந்திய நிலையில் திடீரென புகுந்த மூன்று முதல் ஐந்து பேர் வரை கொண்ட குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள், இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்தினை தீயிட்டு கொழுத்தியுள்ளதுடன், வெடிமருந்துகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாதுகாப்பு படையினர் குவிப்பு
அதேவேளை, துப்பாக்கி ஏந்தியவர்கள் தானியங்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அத்துடன், சம்பவ இடத்தில் இருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |