ஈரான் கப்பல் மீதான தாக்குதல்! இந்தியாவுக்கு சென்று நாமல் கூறிய விடயம்
பாதுகாப்பு வலயமாக இருந்த இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடத்தப்பட்ட ஈரானிய கப்பல் மீதான தாக்குதல், அந்தப் பிராந்தியத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் பிராந்திய ஸ்திரத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நாமல் கூறியுள்ளார்.
நாடுகளின் ஆதரவு
அதன்படி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக பிராந்திய நாடுகளுக்கு இடையே கூடுதல் ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், பொருளாதார மற்றும் இராணுவ வலிமை காரணமாக இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியா தலைமைப் பங்கைக் கொண்டிருந்தாலும், அதற்கு மற்ற நாடுகளின் ஆதரவு தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |