யாழில் இந்திய துணைத் தூதரக அலுவலகம் மீது தாக்குதல் – மூவர் கைது
Sri Lanka Police
Jaffna
By pavan
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ். இந்திய துணைத் தூதரகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இனம்தெரியாத நபர்களினால் 09 ஆம் திகதி இரவு 9 மணியளவில் கண்ணாடி போத்தல்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
பயணித்த மகிழுந்து
இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ். காவல்துறையினர், 3 பேரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு, அவர்கள் பயணித்த மகிழுந்தையும் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்