அரசாங்கத்தின் தீர்மானத்தால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் முன்னாள் எம்.பி
நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரிய வீட்டு வளாகங்களைக் கட்டி வாழ்ந்து வந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் அவற்றை மாற்ற எடுத்த முடிவுகளில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தவின் நிலைமை
அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தனது வழக்கமான இல்லத்திற்கு செல்ல வேண்டியிருக்கும் என்றும் திசாநாயக்க கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,“பிரேமதாசவின் மனைவி ஏற்கனவே வெளியேறிவிட்டார் என்று நினைக்கிறேன்.
சந்திரிகா பண்டாரநாயக்கவின் நிலைமை எனக்குத் தெரியாது. எனவே அவர்களும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் திருவிழா
