தயாரானது ரஷ்யா!! விளிம்பில் மூன்றாம் உலகப் போர் - அமெரிக்காவால் அதிகரித்த பதற்றம்
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவை நோக்கி இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்ப உத்தரவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், இது சர்வதேச அளவில் கடும் விவாதத்திற்கு உரியதாக மாறியுள்ளது.
ட்ரம்ப் நேற்று வெளியிட்ட பதிவில், "ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் கூறிய கருத்துகள் எனக்குள் பதற்றத்தை ஏற்படுத்தின. எனவே ரஷ்யா அருகே இரண்டு அணுஉபரி கப்பல்களை நிலைநிறுத்த உத்தரவிட்டேன்" என குறிப்பிட்டார்.
அவரது இந்த அறிவிப்பு, அணுசக்தி ஆயுதங்களைத் தாங்கக்கூடிய அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்கள், ரஷ்யா உள்ளிட்ட முக்கிய பகுதிகளின் அருகே நிலைநிறுத்தப்படலாம் என்ற மூன்றாம் உலகப்போருக்கான அச்சத்தை தூண்டியிருக்கிறது.
ரஷ்யாவின் பதில்
இந்த நிலையில், ட்ரம்பின் உத்தரவுக்குப் பதிலளித்துள்ள ரஷ்ய அரசு, "அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களின் இயக்கங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த உத்தரவு தேவையற்ற மோதலுக்கு வழிவகுக்கும்" என தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் வோடொலாட்ஸ்கி, "உலகக் கடல்களில் ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள், அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையில் உள்ளன.
ட்ரம்ப் குறிப்பிடும் கப்பல்கள் எங்கள் கண்காணிப்பில் ஏற்கனவே உள்ளன. அவை எங்கு சென்றாலும், எங்கள் வரம்புக்குள் தான் இருக்கின்றன" எனக் கூறியுள்ளார்.
நீர்மூழ்கி கப்பல்கள்
மேலும், "உலக அமைதிக்காக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கட்டாயமாக வேண்டியதாக உள்ளது" என்றும் அவர் வலியுறுத்தினார்.
ரஷ்யாவும், அமெரிக்காவும் உலகில் அணுசக்தி இயக்கம் கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை அதிக அளவில் வைத்துள்ள நாடுகளாக இருக்கின்றன.
இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றி பேசும் போது, அவை சாதாரண கப்பல்கள் அல்ல. 20–30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டியவை.
மூன்றாம் உலகப் போர்
இதனால், நீண்ட நாட்கள் கடலின் அடியில் மூழ்கிய நிலையிலேயே செயல்பட முடியும். மனிதர்கள் அதிக நாட்கள் உள்ளே இருக்க முடியாததால், சில மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் மேலே கொண்டுவரப்படும்.
எனினும் சில முக்கிய ரகசிய நடவடிக்கைகள் நடைபெறும் போது, ஒரு வருடம் வரை மேலே வராமலும் இயக்கப்படக்கூடும்.
இந்த சூழ்நிலையில், மூன்றாம் உலகப் போர் குறித்து வரும் வார்த்தைகள் வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல், நடைமுறைப்பட வாய்ப்பு உள்ளதாகவே சில சர்வதேச அணிபல நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் திருவிழா
