ஆப்கானில் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்கியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த தா்குதலில் பாதுகாப்பு அமைச்சரான பிஸ்மில்லா கான் முகமதி வீட்டில் இருக்கவில்லை.
தீவிரவாதிகள் கார் வெடிகுண்டை வெடிக்கச் செய்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதலை மேற்கொண்டனர். அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்
மற்ற முக்கிய ஆப்கானிஸ்தான் நகரங்களில் மோதல் தொடர்கையில், ஐ.நா. பாதுகாப்பு சபை வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். அதே நேரத்தில் காயமடைந்த 11 பேர் காபூலில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக இத்தாலிய மருத்துவ தொண்டு நிறுவனமான எமர்ஜென்சி உறுதிப்படுத்தியது.
தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் தலிபான் தாக்குதலின் அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.