கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது
பாணந்துறை பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாணந்துறை வலான பாலத்திற்கு அருகில் நேற்று(12) நள்ளிரவு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரே தாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கி மூவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியமையினால் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினை தொடர்ந்து பாணந்துறை பிரதேச போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருவர் கைது
சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்தறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |