வவுனியாவில் யுவதி மீது தாக்குதல்

Vavuniya Sri Lanka Police Investigation
By Jaso Jan 21, 2024 07:11 AM GMT
Report

வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக இரு பெண்கள் இன்று (20.01) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு தண்ணீர் மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்க்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப் பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் 

குறித்த பகுதி வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டிடங்களின் காரணமாகவும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு குறித்த வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பிரதேச சபையால் அவை தீர்த்து வைக்கப்படவில்லை.

வவுனியாவில் யுவதி மீது தாக்குதல் | Attack On Young Woman In Vavuniya

 இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் வீதி வாய்கால் ஊடாக இன்னுமொரு வீட்டை அண்மித்து சென்ற நிலையில், கழிவு நீரை வீதிக்கு விட்ட வீட்டாருடன் அயல் வீட்டில் வசிக்கும் யுவதி ஒருவர் முரண்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவு: சுமந்திரன் படுதோல்வி! (மூன்றாம் இணைப்பு)

தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவு: சுமந்திரன் படுதோல்வி! (மூன்றாம் இணைப்பு)

இதன்போது இரு பகுதியினருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், குறித்த யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த 22 வயது யுவதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு சகோதரிகள் கைது

சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற்கொண்டதாக 30 மற்றும் 25 வயதுடைய சகோதரிகளான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் யுவதி மீது தாக்குதல் | Attack On Young Woman In Vavuniya

மேலதிக விசாரணைகளில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வவுனியாவில் அரச திணைக்களம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த துயரம்

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த துயரம்

இதேவேளை, வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள பல வீதிகளின் வடிகாலமைப்பு சீர்செய்யப்படாத நிலை காணப்படுவதுடன், மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்படைந்த போதும் வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றமையே இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

  

ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்