ஒட்டுசுட்டானில் யானை தாக்கி ஒருவர் பலி
Mullaitivu
Elephant
By Vanan
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை மண்வெட்டி பிடி வெட்டுவதற்காகச் சென்ற வேளையில், ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் 20 ஆவது கிலோமீற்றர் வனப்பககுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
வவுனியா மெனிக்பாம் கிராமத்தைச் சேர்ந்த, ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் வசித்து வருகின்ற பச்சைமுத்து - புலேந்திரன் (வயது48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒட்டுசுட்டான் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்