ஹிஸ்புல்லாவிற்கு விடுதலையே கிடையாது: நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பு
லெபனானில் (Lebanon) போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் (Israel) இராணுவ ரீதியாக செயல்படும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அறிவித்துள்ளார்.
இது முக்கியமான விடயம் என்றும் கடதாசியில் போடப்படும் ஒப்பந்தம் இல்ல என்றும் பிரதமர் நெதன்யாகு அந்நாட்டு நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அதன்போது, "வடக்கில் எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவும், போர்நிறுத்தத்திற்குப் பின்னரும் நாங்கள் கட்டாயப்படுத்தப்படுவோம்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாவின் இருப்பு
அத்தோடு, எந்த ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இஸ்ரேலின் எல்லைக்குட்பட்ட தெற்குப் பகுதியில் ஹிஸ்புல்லாவின் இருப்பு இல்லை உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், "ஒக்டோபர் 6 இல் இருந்த நிலைக்கு ஹிஸ்புல்லாவை திரும்ப அனுமதிக்க மாட்டோம் என 2023 அதன் கூட்டாளியான ஹமாஸ் தெற்கு இஸ்ரேலில் தாக்குதலுக்கு முன்னதாக, அவர் கூறியிருந்தார்.
இதேவேளை, மத்திய இஸ்ரேலை குறிவைத்து இன்றையதினம் ஹிஸ்புல்லாக்கள் நூற்றுக்கணக்கான ரொக்கெட்டுக்களை ஏவி தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |