கிளிநொச்சியில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் முயற்சி - பொதுமக்கள், அரசியல்வாதிகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு
கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்லியல் சின்னங்கள் அடையாளப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதற்கு எதிராக பிரதேச மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் இன்று ஒன்று திரண்டு எதிரடப் வெளியிட்டிருந்தனர்.
எனினும் தொல்லியல் திணைக்கள் அதிகாரிகள் குறித்த பணிகளுக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வுக்கான ஏற்பாடு
கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள காணியில் புராதன தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ளதாக தெரிவித்து இன்றயை தினம் குறித்த பகுதியில் ஆய்வுகளுக்காக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அங்க செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், கிராமக்கள், அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கிராம மட்ட அமைப்புகள் என பலர் இன்று தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடியிருந்தனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சமத்துவக் கட்சியின் செயலார் நாயகம் எம்.சந்திரகுமார் மற்றும் பொதுமக்கள் குடிசார் அமைப்புக்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
