வடகொரிய அதிபரை கொலை செய்ய முயற்சி..! பாதுகாப்பு அதிகரிப்பு
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஐ கொல்ல முயற்சி நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் அவரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட தகவலால் மக்களிடையே பரபரப்பு அதிகரித்துள்ளது.
வடகொரியாவின் அதிபரான கிம் ஜோங் உன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர்.
அமெரிக்காவுடன் தொடர்ந்து மோதி வரும் கிம் ஜோங் உன் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை அணு ஆயுத சோதனை ஆகியவற்றை நடத்தி உலக நாடுகளை அதிரவைத்து வருகிறார்.
இந்த நிலையில், அண்மையில் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் நகரில் குண்டுவெடிப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது.
இது கிம் ஜோங் உன் ஐ கொலை செய்ய முன்னெடுக்கப்பட்ட முயற்சி என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் கிம் ஜாங் உன் இன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் விரிவான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேரச் செய்தித் தொகுப்பில் காண்க.