இலவச சுகாதார சேவையை தனியார் மயப்படுத்த முயற்சி
Ministry of Health Sri Lanka
SL Protest
By Vanan
இலங்கை அரசாங்கம் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, இலவச சுகாதார சேவையை தனியார் மயப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இதனைத் தெரிவித்த அவர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியான போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.
இதன்போது, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை சமாளிக்கும் வகையில் அனைத்து துறையைச் சேர்ந்தவர்களினதும் ஊதியத்தை அதிகரிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி