கிளிநொச்சியில் பணியாற்றும் சிறிலங்கா சிப்பாய் சிறுமிகளை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சி
கிளிநொச்சியில் பணிபுரியும் சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் சிறுமிகளை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ சிப்பாய் நேற்றையதினம்(14) கைதுசெய்யப்பட்டுள்ளார் என நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
நோர்வூட்- வெஞ்சர் தோட்டத்தைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறை நிமித்தம் தனது வீட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 10 மற்றும் 8 வயது சிறுமிகள் இருவரை தேயிலை மலைக்கு அழைத்துச் சென்று, துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதன்போது ஒரு சிறுமி அவரிடமிருந்து தப்பியோடி வந்தததை அவதானித்த பிரதேசவாசிகள் சந்தேகநபரை பிடித்து நோர்வூட் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமிகளின் பெற்றோரால் நோர்வூட் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் விசேட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட
சந்தேகநபரை
ஹட்டன் நீதவான் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர்
தெரிவித்தனர்.