நடப்பு அரசியலில் இருந்து விரட்டியடிக்கப்படும் மகிந்த: கிளம்பும் எதிர்ப்பு
மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) நடப்பு அரசியலில் இருந்து அகற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யுத்த முடிவு
அதன்போது அவர் தொடர்ந்தும் கூறியதாவது, இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இந்த நாட்டு மக்களை சுதந்திரமாக வாழ அனுமதித்து, மீண்டும் இந்த நாட்டை ஒன்றிணைத்த மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பைக் குறைப்பது தொடர்பில் மீண்டும் ஒருமுறை பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நீக்கப்பட்ட போது, அவரின் பாதுகாப்பை நீக்க வேண்டாம் என அவரது பாதுகாப்புப் பொறுப்பதிகாரி அறிவுறுத்திய போதே அவரது பாதுகாப்புப் பொறுப்பதிகாரி நீக்கப்பட்டதாக எமக்கு தகவல் கிடைத்தது.
பயங்கரவாத விசாரணை
மேலும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் சட்டத்தரணி மனோஜ் கமகே பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நாட்டில் இதுவரை நடக்காத அடக்குமுறை இது.
ஒரு வாடிக்கையாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ஒரு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது காவல்துறையால் ஒருபோதும் விசாரிக்கப்படவில்லை.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |