ட்ரம்பை இலக்கு வைத்த துப்பாக்கிதாரி! பேரதிர்ச்சியில் நெதன்யாகு
வொஷிங்டனில் நடைபெற்ற விருந்து நிகழ்வின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் குறித்து தான் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி இருவரும் பாதுகாப்பாகவும் நலமுடனும் இருப்பதை அறிந்து தான் நிம்மதியடைவதாகவும், இச்சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரி விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், துரிதமாகவும் தீர்க்கமாகவும் செயல்பட்டு அச்சுறுத்தலை முறியடித்த அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகளுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் வாக்குமூலம்
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது ஜனாதிபதி ட்ரம்ப் தான் நேரடியாக இலக்கு வைக்கப்பட்டாரா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதனையும் உறுதிப்படுத்தவில்லை.
Donald Trump says he has shared on social media a photo of the suspect in custody along with security camera footage appearing to show the start of the shooting, saying the posts were made “in the interest of transparency.” pic.twitter.com/qXmCXpN6Sy
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) April 26, 2026
இருப்பினும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளை சுடத் திட்டமிட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்தும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்