கொடூரமான முறையில் கூரிய ஆயுதத்தால் இருவர்மீது தாக்குதல்
Sri Lanka Police
Galle
Attempted Murder
By Dharu
ஹிக்கடுவை காவல்துறைக்குட்பட்ட பிரதேசத்தில் இருவர் மீது கொலை முயற்சித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹிக்கடுவை-வேவல சந்தியில் இன்று (30) இனந்தெரியாத நபர்களால் காலை ஆண் ஒருவர் மீதும் பெண் ஒருவர் மீதும் கூரிய ஆயுதத்தால் கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த பெண்

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவை காவல்துறையினர் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி