நீர்கொழும்பு சிறை கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு பாதாள உலக அச்சுறுத்தல்

Sri Lanka Sri Lanka Police Investigation Negombo
By Dharu Jul 09, 2026 05:18 AM GMT
Report

நீர்கொழும்பு சிறையில் நடந்த கலவரத்தின் போது, ​​கைதிகள் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்திய சிறை அதிகாரிக்கு தற்போது தொடர்ச்சியான மரண அச்சுறுத்தல்கள் வருவதாக பாதுகாப்பு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மரண அச்சுறுத்தல்களில் பெரும்பாலானவை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி வாயிலாக வருவதாகப் பாதுகாப்பு தரப்புகள் தெரிவித்துள்ளன.

தன் உயிரைப் பணயம் வைத்து, திணைக்களத்தின் நற்பெயரையும் சக அதிகாரிகளின் உயிரையும் காப்பாற்றிய குறித்த அதிகாரிக்கு உடனடியாகவும் முறையாகவும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என சிறைச்சாலை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

டெங்கு பரவல் தீவிரம் : கொழும்பு பல்கலை கல்வி நடவடிக்கைகள் இணையவழியில்

டெங்கு பரவல் தீவிரம் : கொழும்பு பல்கலை கல்வி நடவடிக்கைகள் இணையவழியில்

இறுதி அஞ்சலி 

கொலைசெய்யப்பட்ட அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, திணைக்களப் பொறுப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு வந்தபோது, ​​அங்கு கூடியிருந்த அதிகாரிகள் அமைச்சரைச் சூழ்ந்து, ஆபத்தில் இருக்கும் அதிகாரியின் உயிரைக் காப்பாற்ற உடனடியாகத் தலையிடுமாறு ஒருமனதாகக் கேட்டுக்கொண்டனர்.

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு பாதாள உலக அச்சுறுத்தல் | Underworld Threat To Officer Who Opened Fire

அன்று வெலிக்கடை சிறையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது, ​​கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் குழு ஒன்று சிறையின் பிரதான வாயிலை மறித்து, பல அதிகாரிகளைப் பணயக்கைதிகளாகப் பிடித்து அவர்களைக் கடுமையாகத் தாக்கியதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

அப்போது பணியில் இருந்த அதிகாரி ஒருவர், வாயிலுக்குள் தனது துப்பாக்கியை நீட்டி பலமுறை சுட்டதால், அச்சமடைந்த கைதிகள் தப்பி ஓடியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக வாயில்களைத் திறந்த சிறை அதிகாரிகளும் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரும் உள்ளே சென்று, பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட அதிகாரிகளையும் காயமடைந்த கைதிகளையும் மீட்டு, அவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம்: இடமாற்றப்பட்ட பெண் கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம்: இடமாற்றப்பட்ட பெண் கைதிகள்

யாழ்.மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்த கைக்குண்டு!

யாழ்.மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்த கைக்குண்டு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி