திடீரென மரத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்த நபர்: வவுனியாவில் பதற்றம்
வவுனியாவில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் திடீரென மரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ளமரம் ஒன்றில் ஏறியே இவ்வாறு தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.
மரத்தில் ஏறி தற்கொலை செய்வேன்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருகோணமலை மஹாயபுர பகுதியை சேர்ந்த 51வயதுடைய அநுரகுமார என்பவர் கடந்த மூன்று தினங்களாக வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக வந்து சென்றதாகவும் எனினும் தனக்கு கடவுச்சீட்டை பெறமுடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த குறித்த நபர் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இருந்த மரத்தில் ஏறி தற்கொலை செய்வேன் என கூறி போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து காரியாலய உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் கடவுச்சீட்டு பெறுவதற்கான உத்தரவாதத்தை வழங்கியிருந்தனர். இதனை தொடர்ந்து குறித்த நபர் மரத்திலிருந்து கீழ் இறங்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |