இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம்..! நூறு ஆண்டுகளின் பின் எங்கே தோன்றுகிறது தெரியுமா
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு கடந்து செல்லும் செயற்பாட்டை நாம் சூரிய கிரகணம் என்கிறோம், இந்த நிகழ்வை காண்பதற்காக பலரும் ஆவலுடன் காத்திருப்பதும் நாம் அறிந்த விடயமாகும்.
அந்தவகையில், இந்த ஆண்டின் (2024) முதலாவது சூரிய கிரகணம் எப்போது எங்கே நிகழப்போகிறது என்பது தெரியுமா, இதன் சிறப்புக்கள் என்னவென்பது தெரியுமா, இந்த அனைத்துக் கேள்விகளுக்குமான பதிலை இந்த பதிவில் பார்ப்போம்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதியன்று, இந்த ஆண்டின் முதலாவது முழு சூரிய கிரகணம் இடம்பெறவுள்ளது.
மெக்சி்கோவின் பசிபிக் கரை
வட அமெரிக்காவின் மெக்சி்கோவில் ஆரம்பமாகும் இந்த கிரகணமானது, வட அமெரிக்கா, கனடா வரை செல்லுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதன்படி, மெக்சி்கோவின் பசிபிக் கரையில் காலை 11 மணியளவில் கிரகணம் ஆரம்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருபது ஆண்டுகள்
நூறு ஆண்டுகளின் பின்னர் வட அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் நிகழ்வது இதுவே முதல் முறை என்பதால் இந்த கிரகணம் அமெரிக்க மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
அதேவேளை, ஏப்ரல் மாதக் கிரகணத்தை தவறவிட்டால் வட அமெரிக்க மக்கள் அதைக்காண இன்னும் இருபது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |