பூமிக்கு அருகில் தண்ணீர் உள்ள கிரகம் கண்டுபிடிப்பு
பூமியை போன்று வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
இதில் சூரிய குடும்பத்துக்கு வெளியே பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு வெளியே நீர் மூலக்கூறுகளை அதிகளவில் கொண்ட கிரகமொன்றை நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலை நோக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஜிஜே 9827டி என்ற கிரகத்திலேயே நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நிறமாலை தரவுகள்
பூமியின் விட்டத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு இருக்கும் இந்த கிரகத்தில் நீர் நிறைந்த வளிமண்டலங்கள் இருப்பதை ஹப்பிள் தொலைநோக்கி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
மீனம் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு குறு நட்சத்திரங்களை இந்த கிரகம் சுற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது.
தவிரவும், இந்த கிரகம் ஒவ்வொரு முறையும் சூரியனை கடந்து செல்லும் போது எடுக்கப்படும் நிறமாலை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அந்த கிரகத்தில் உள்ள மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன.
அதிகளவு நீர் மூலக்கூறுகள்
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த கிரகத்தில் அடர்த்தி களவு நீர் மூலக்கூறுகள் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டில் நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டு ஜிஜே 9827டி என்ப் பெயரிடப்பட்ட கிரகத்திலேயே நீர் நிறைந்த வளிமண்டலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை நீர் இருப்பதாக கண்டறியப்பட்ட கிரகங்களில் இந்த கிரகமே அதிகளவு நீர் மூலக்கூறுகளை கொண்டிருப்பது மாத்திரமன்றி, ஒப்பீட்டளவில் பூமிக்கு அருகில் இருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |