தமிழ், சிங்கள புத்தாண்டின் சுப நேரங்கள் குறித்து வெளியான தகவல்

Sinhala and Tamil New Year Sri Lanka Sri Lankan Peoples
By Sathangani Mar 26, 2024 05:23 AM GMT
Report

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக அரச ஜோதிடர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுப நேரங்களின் பட்டியலைப் பின்பற்றுமாறு புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த ஆண்டு புத்தாண்டு நேரத்தை கணிப்பதில் பாரிய தவறு நடந்துள்ளதாக தேசிய ஜோதிடர்கள் அமைப்பு குற்றம்சாட்டியிருந்தது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் உறுப்பினர் ரொஷான் சானக திசேரா இதனைக் கூறியிருந்தார்.

குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

புத்தாண்டின் நல்லநேரம்

''அரச சுபக்குழு வழங்கிய சுப நிகழ்ச்சி அட்டவணையில் சதி காணப்படுகிறது. இந்நிலையில், இரவு வேளைகளில் புத்தாண்டு மங்கள காரியங்களை முன்னெடுப்பதன் மூலம் சிறுவர்களுக்கு மங்கள காரியங்களைப் பற்றிய புரிதல் காணப்படாது.

தமிழ், சிங்கள புத்தாண்டின் சுப நேரங்கள் குறித்து வெளியான தகவல் | Auspicious Timings Of Tamil And Sinhala New Year

மேலும், இவ்வருடம் அரச அனுசரணை சபையினால் அடுப்பு பற்ற வைக்க வழங்கப்பட்ட நேரம் ஜோதிடத்திற்கு புறம்பானது. நள்ளிரவு வழங்கப்பட நேரத்தை மாற்றியமைத்து மறுநாள் காலை ஜாதகத்தை பரிந்துரைக்க வேண்டும்'' என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழ் சிங்கள புத்தாண்டின் போது நல்லநேரம் அல்லது சுபவேளை நேரம் குறித்தலில் தவறு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை இலங்கையின் அரச ஜோதிடர்கள் குழு நிராகரித்திருந்தது.

யாழில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய சொகுசு பேருந்து! ஒருவர் பலி

யாழில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய சொகுசு பேருந்து! ஒருவர் பலி

புத்தாண்டு சடங்குகள்

நடைமுறைச் சிக்கல்கள் இருந்தபோதிலும் இரவு வேளையிலேயே சடங்குகளுக்கு மிகவும் பொருத்தமான நேரம் அமைவதை அந்த குழு நியாயப்படுத்தியிருந்தது.

தமிழ், சிங்கள புத்தாண்டின் சுப நேரங்கள் குறித்து வெளியான தகவல் | Auspicious Timings Of Tamil And Sinhala New Year

குழு உறுப்பினர் ஜோதிடர் ஜி.எம். குணபால கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் விளக்கமளித்திருந்தார். இது தொடர்பில் அவர் கூறுகையில்,

''2024 ஏப்ரல் 13ஆம் திகதி இரவு 9.05 மணிக்கு சூரியப் பெயர்ச்சி ஏற்படுவதாகவும், சூரியன் மறையும் இரவு 9.05 மணி முதல் ஆறு மணித்தியாலம் இருபத்தி நான்கு நிமிடங்களுக்குள் புத்தாண்டு சடங்குகள் சுப வேளையில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் ராகு காலத்தை தவிர்த்து ஆறு மணி 24 நிமிடங்களில் இரவில் சுப நேரம் குறிக்கப்படுகிறது. புத்தாண்டு சடங்குகளை இரவில் கடைப்பிடிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் குறைப்பு

மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் குறைப்பு

பொது மக்களுக்கு வேண்டுகோள் 

எனினும் சடங்குகளுக்கு சிறந்த நேரம் இரவிலேயே அமைகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாறான இரவு நேர சுபநேரங்கள் வரும்.

தமிழ், சிங்கள புத்தாண்டின் சுப நேரங்கள் குறித்து வெளியான தகவல் | Auspicious Timings Of Tamil And Sinhala New Year

குழுவின் பெரும்பான்மையானவர்கள் இந்த நேரத்தை அங்கீகரித்த நிலையில், 42 பேரில் ஐந்து உறுப்பினர்களே ஆட்சேபனை தெரிவித்தனர். அவர்கள் பகல் நேரத்தில் குறிக்கப்பட்ட சுப நேரங்களை விரும்புகின்றனர். அத்தோடு, இந்த ஐந்து உறுப்பினர்களில் நான்கு பேர் குழுவுக்கு புதியவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக அரச ஜோதிடர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுப நேரங்களின் பட்டியலைப் பின்பற்றுமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனையில் மீன் வலையில் சிக்கி இளைஞன் பரிதாப மரணம்!

வாழைச்சேனையில் மீன் வலையில் சிக்கி இளைஞன் பரிதாப மரணம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019