சட்டவிரோத ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடும் சிறிலங்கா - அவுஸ்திரேலியா

Nihal Talduwa Sri Lanka Australia
By Beulah Jul 11, 2023 05:32 AM GMT
Report

அவுஸ்திரேலியாவின் கூட்டு முகவர் பணிக்குழு நடவடிக்கை இறையாண்மை எல்லைகள் தளபதி, ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ், சி.எஸ்.சி, ஆர்.ஏ.என் , கடந்த வாரம் கொழும்பிற்கு  விஜயம் மேற்கொண்டதன் மூலம், சட்டவிரோத ஆட்கடத்தலை நிறுத்துவதற்கான அவுஸ்திரேலியாவின் அர்ப்பணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து சென்ற சிறிலங்காவைச் சேர்ந்த  41 பேர் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் இடம்பெயர முற்பட்ட நிலையில், கடந்த மே மாத ஆரம்பத்தில் இறையாண்மை எல்லைகள் நடவடிக்கையினால் (Operation Sovereign Borders) இடைமறிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ரியர் அட்மிரல் ஜோன்ஸ்,

மக்களுக்கு தெளிவூட்டல்

சட்டவிரோத ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடும் சிறிலங்கா - அவுஸ்திரேலியா | Australia Efforts To Curb Illegal Migration

”சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதிலான வெற்றியானது, இரு அரசாங்கங்களின் தொடர்ச்சியான வெற்றியாகும். ஆனால் இது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகத்தை எதிர்த்துப் போராடுவதற்கு சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களுக்கிடையேயான கூட்டாண்மை உயர்ந்த தரத்தில் உள்ளது. இது நீடித்த நெருக்கத்திற்கு ஒரு சான்றாகும்.

இந்த இடைமறிப்பானது சட்டவிரோத பயணங்களின் ஆபத்துகள் மற்றும் பின்விளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவூட்டுவதோடு, இது தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நிரூபிக்கிறது.“

சிறிலங்கா கடற்படைத் தளபதி 

சட்டவிரோத ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடும் சிறிலங்கா - அவுஸ்திரேலியா | Australia Efforts To Curb Illegal Migration

சிறிலங்கா  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மக்கள் இன்னும் ஏமாற்றமான வழிகளில் செலவிட்டு, சட்டவிரோத கடல்வழிப் பயணங்கள் பலனளிக்கும் என ஏமாறுகிறார்கள். அது அவ்வாறு அமையாது. அதனால்தான் இந்த பயணங்களைத் தடுக்கும் வகையில் அது தொடர்பான இடர்கள் மற்றும் சட்ட ரீதியான பாதைகள் குறித்து சமூகங்களுக்குக் தெளிவூட்டுவது இன்றியமையாததாக உள்ளது.“

சட்டவிரோத கடல் வழிப் பயணங்களைத் தடுப்பதிலும் அதனை முறியடிப்பதிலும் சிறிலங்காவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான பங்காளித்துவத்தின் செயற்றிறன் தொடர்பில், காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இங்கு பாராட்டிப் பேசினார்.

“ஆட்கடத்தல் மற்றும் ஏனைய நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு சிறிலங்கா  காவல்துறைத் திணைக்களம் அவுஸ்திரேலியாவுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது. மக்கள் ஆட்கடத்தல்காரர்களினால் பாதிக்கப்பட்டு இரையாவதைத் தடுப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்,” என நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடுமையான எல்லைப் பாதுகாப்பு

சட்டவிரோத ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடும் சிறிலங்கா - அவுஸ்திரேலியா | Australia Efforts To Curb Illegal Migration

இந்த உறவின் வெற்றியானது நாடு முழுவதும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆட்கடத்தலுக்கு எதிரான Zero Chance தொடர்பாடல் பிரச்சாரத்தின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது. இத்திட்டமானது, பல்வேறு விளம்பரங்கள் மற்றும் சமூக தொடர்பாடல் வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது அவுஸ்திரேலியாவின் வலுவான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள், உத்தரவாதமற்ற கடல் பயணங்களை மேற்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள், சட்டவிரோதமாக குடியேறுபவர்களை எச்சரிப்பதற்காகவும், ஆட்கடத்தல்காரர்கள் தங்கள் நலனுக்காக மேற்கொள்ளும் குற்றவியல் புறக்கணிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கொண்டுள்ளது.

Zero Chance தொடர்பான வீதியோர சமூக விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், அவுஸ்திரேலியாவின் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து சிறிலங்காவில் இருப்பவர்களிடம் அதிக அளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமை அறியக் கூடியதாக இருந்தது.

எனினும் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லும் முயற்சிகளின் சட்டரீதியான பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பல்வேறு மட்டங்களில் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

சட்டவிரோத கடல் பயணங்கள்

சட்டவிரோத ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடும் சிறிலங்கா - அவுஸ்திரேலியா | Australia Efforts To Curb Illegal Migration

“கணக்கெடுக்கப்பட்டவர்களில் 97% ஆனோர் சட்டவிரோத கடல் பயணங்கள் குறித்த அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் பற்றிய வலுவான விழிப்புணர்வைக் கொண்டிருந்தனர். இந்த மட்டத்திலான விழிப்புணர்வானது, சிறிலங்காவிலுள்ள பல்வேறு சமூக-பொருளாதார குழுக்களிடையே Zero Chance செய்தியை பரப்புவதில் எமது சிறிலங்கா பங்காளிகளின் அர்ப்பணிப்பைப் பறைசாற்றுகிறது.“ என ரியர் அட்மிரல் ஜோன்ஸ் தெரிவித்தார்.

இதை இவ்வாறு சொல்வதன் மூலம், இப்பிராந்தியத்தில் எமது ஒருங்கிணைந்த பணி ஒருபோதும் நிற்காது. இது போன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதன் பயனற்ற தன்மையை இங்கு இதற்கு அப்பால் என்னால் விளக்கமுடியாது.

சட்டவிரோத கடல் ரீதியான குடிபெயர்வை மேற்கொள்வது தொடர்பில் எதிர்பார்ப்பு கொண்டவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு பூச்சியமாகவே உள்ளது என ஜோன்ஸ் இங்கு வலியுறுத்தினார்.

அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: www.australia.gov.au/zerochance இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025