மறுக்கப்படும் பலஸ்தீனர்களின் விசா: பக்க சார்பாக செயற்படும் அவுஸ்திரேலியா
இஸ்ரேலுக்கு (Israel) ஆதரவளித்து 7,000 பலஸ்தீனர்களின் (Palestine) விசா விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா (Australia) அரசு நிராகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் (Gaza) இடையே நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் பலர் அகதிகளாக மீள்குடியேற பல நாடுகளுக்கு விசாவுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
அதில் பல பலஸ்தீனர்களும் அவுஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அந்த விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா நிராகரித்து வருவதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
தேசிய பாதுகாப்பு
இதுவரை 10,033 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் அவுஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக உள்துறை அமைச்சர் டோனி பர்கோ (Tony Burgo) தெரிவித்துள்ளார்.
இவற்றில் 2,922 விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுடன் 7,111 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுவேனை, இஸ்ரேல் குடிமக்களுக்கான அவுஸ்திரேலிய விசா விண்ணப்பங்கள் அந் நாட்டு அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதுவரை இஸ்ரேலின் 235 விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 8,646 விசா விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பலஸ்தீனியர்களின் நுழைவு அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் (Peter Dutton) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |