அவுஸ்திரேலியாவை 181 ஓட்டங்களில் சுருட்டியது இந்தியா!
அவுஸ்திரேலியா (Australia) - இந்தியா (India) அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அவுஸ்திரேலிய அணியை அதன் முதல் இனிங்ஸில் 181 ஓட்டங்களுக்குள் சுருட்டியது இந்திய அணி.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ஓட்டங்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
சிறப்பான ஆட்டம்
அவுஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் லபுஷாக்னே 2 , சாம் கொன்ஸ்டாஸ் 23 டிராவிஸ் ஹெட் 4 ஓட்டங்களை பெற்றனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - பியூ வெப்ஸ்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
எனினும் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன.
இறுதியில் 181 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது. இதில் ஸ்மித்33, பியூ வெப்ஸ்டர் 57,அலெக்ஸ் ஹரே 21 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் பும்ரா02, சிராஜ் மற்றும் கிருஷ்ணா இருவரும் தலா 03, நிதிஷ் குமார் ரெட்டி 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதனையடுத்து தனது இரண்டாவது இனிங்ஸை தொடங்கிய இந்திய அணி 06 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் ரிஷப் பந்த் மட்டும் கூடுதலாக 61 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
தற்போது இந்திய அணி 145 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |