வவுனியாவில் தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து : வயோதிப பெண் பலி!
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார்.
தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று (23) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்துடன் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானது.
ஒருவர் உயிரிழப்பு
இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததில், அதில் பயணித்த வயோதிப பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராசலிங்கம் தவமணி வயது 75 என்ற முதிய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 22 மணி நேரம் முன்