தாய், மகள் இரட்டைக்கொலை - சூத்திரதாரி சிக்கினார்
தாய், மகள் இரட்டைக்கொலை
பதுளை கனல்பின் தோட்டத்தின் ஹிகுருகமுவ பகுதியிலுள்ள தோட்ட வீடொன்றில் வைத்து தாய் மற்றும் மகளை வெட்டி கொலை செய்து மற்றுமொரு மகளை வெட்டிக் கொல்ல முயற்சித்த முச்சக்கர வண்டி சாரதியை பதுளை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
கடந்த 10ம் திகதி இந்த இரட்டை கொலைச் சம்பவம் நடந்தது. சம்பவத்தில் 83 வயதான தாயும் 56 வயதான மகளும் உயிரிழந்துள்ளதுடன் 62 வயதுடைய மற்றுமொரு மகள் படு காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பதுளை காவற்துறையினர் பதுளை வீரியபுர பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்துள்ளனர்.
கொலைக்கான காரணம்
கொலை செய்யப்பட்ட மகளிடம் சந்தேகநபர் 20,000 ரூபா கடனாக கேட்டுள்ளதாகவும், அதனை வழங்காத காரணத்தினால் தாயும்,மகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைக்கு முன்னர் இரண்டு பெண்களையும் அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை எடுத்துச் சென்றதாகவும், அவற்றை அவர் அடகு வைத்த போதே அவரைக் கண்டுபிடித்ததாகவும் காவ்துறையினர் தெரிவிக்கின்றனர்.

