செயலி மூலம் பதிவுசெய்த பயணியை ஏற்றச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்: யாழில் அட்டகாசம்

Jaffna Jaffna Teaching Hospital Nothern Province
By Kathirpriya Oct 31, 2023 11:26 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் செயலி மூலம் பதிவுசெய்த பயணியை ஏற்றச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது, முச்சக்கரவண்டி தரிப்பிட சாரதிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இன்று (31) யாழ் போதனா வைத்தியசாலைக்கு அண்மையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான சாரதி இந்த தாக்குதல் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடுகளை செய்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ரணிலுடன் முரண்படும் பந்துல

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ரணிலுடன் முரண்படும் பந்துல

அதிக கட்டணம்

அதன்படி, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் ஒருவர் செயலி ஊடாக முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு பதிவு செய்துள்ளார், அதனை அடுத்து அவரை ஏற்றுவதற்காக குறித்த முச்சக்கர வண்டி சாரதி அப்பகுதிக்கு வந்துள்ளார்.

இதன் போது, அப்பகுதியில் தரிப்பிடத்தில் நின்று முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபடுவோர், தரிப்பிடத்தில் நிற்கும் தமது முச்சக்கர வண்டியையே வாடகைக்கு அமர்த்த வேண்டும் என முரண்பட்டு, அங்கு வந்த முச்சக்கர வண்டி மீதும் நபர் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதனை அடுத்து பாதிக்கப்பட்ட சாரதி யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தேர்தலை எதிர்கொள்ள மைத்திரி தரப்பு திரைமறைவில் திட்டம்!

தேர்தலை எதிர்கொள்ள மைத்திரி தரப்பு திரைமறைவில் திட்டம்!

செயலி மூலம் பதிவுசெய்த பயணியை ஏற்றச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்: யாழில் அட்டகாசம் | Auto Stand Drivers Attack Pick Me Driver At Jaffna

யாழ்.நகரில், பேருந்து நிலையம், வைத்தியசாலை மற்றும் புகையிரத நிலையம் போன்ற பகுதிகளில் நிற்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் அதிக கட்டணங்களை அறவிட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நீண்ட கால போராட்டத்தின் பின் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானிகளை பொறுத்துமாறும் அவ்வாறு பொறுத்தாத சாரதிகளை தரிப்பிடங்களில் நின்று சேவையில் ஈடுபட வேண்டாம் எனவும் , மீறுபவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் யாழ்.மாவட்ட செயலர் அறிவித்திருந்தார்.

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்: அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கும் வரி திட்டம்

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்: அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கும் வரி திட்டம்

பெரும் நஷ்டம்

அதனையடுத்து ஒரு சில சாரதிகள் கட்டண மானிகளை பொருத்தியிருந்தாலும், சேவையில் ஈடுபடும் போது மானி பழுதடைந்து விட்டது என பொய் கூறி அதிக கட்டணமே அறவிட்டு வந்துள்ளனர்.

செயலி மூலம் பதிவுசெய்த பயணியை ஏற்றச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்: யாழில் அட்டகாசம் | Auto Stand Drivers Attack Pick Me Driver At Jaffna

இவ்வாறிருக்கையில் யாழ்ப்பாணத்தில் மக்கள் பலரும் செயலி மூல முச்சக்கர வண்டிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதனால் தரிப்பிடத்தில் நின்று சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வரும் நிலையில், இன்றைய தினம் குறித்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தமிழர் பகுதியில் தொடரும் திருட்டு : சந்தேகநபர் காவல்துறையினரால் கைது

தமிழர் பகுதியில் தொடரும் திருட்டு : சந்தேகநபர் காவல்துறையினரால் கைது

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025